செய்தி
முஸ்லிம் மக்களை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம் அதன் விளைவை கூடிய விரைவில் அனுபவிப்பார்!- இரா.சம்பந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 11:43.21 PM GMT ]
நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத்தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

தமது தனித்துவ கட்சியின்மீது கொண்டிருந்த நம்பிக்கையினால்தான் முஸ்லிம் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது.

மக்களின் ஆணையை புறந்தள்ளி முடிவெடுத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார். இது நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப்படுகிறது.

தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் இப்பொழுதும் பொறுமை காத்திருந்தோம்.

ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், அதனைக்கூட தட்டியொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என்றார் சம்பந்தன்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.