செய்தி
 Photo
பொதுமக்களின் சொத்துக்களை இராணுவம் ஆக்கிரமிக்காது!- ஐநா மனிதஉரிமை அதிகாரிகளிடம் ஹத்துருசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 03:57.00 PM GMT ]
பொதுமக்களின் சொத்துக்களை இராணுவம் ஆக்கிரமிக்கவோ, சுவீகரிக்கவோ மாட்டாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி உட்பட ஐ.நா. அதிகாரிகள், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தனர்.

நாட்டின் மூன்றிலொரு பகுதியை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்கு பெரும் எண்ணிக்கையானனோர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். யுத்தம் முடிந்துவிட்டது என்பதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடிய சிப்பாய்களை வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. அவர்கள் நாட்டிற்குள் வைத்திருக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணமானது இலங்கையின் ஒரு பகுதியாகும். எனினும் நாட்டின் ஏனைய சில மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்திலுள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறைவாகும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கையை மிகைப்படுத்துகின்றன' என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பற்றிய தகவல்கள், யுத்தம் மற்றும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட உயிர் சொத்து அழிவுகள் குறித்து மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க விளக்கியதாக, பாதுகாப்புப் படைகளின் யாழ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டோம். தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் அனுபவித்த துன்பங்களை நாம் கண்டோம். பயங்கரவாதத்தை வெற்றிரகமாக தோற்கடித்த பின்னர் அடிப்படைத் தேவைகளை நாம் இனம் கண்டதுடன் நலன்புரித் திட்டங்கள் பலவற்றை இராணுவம் ஆரம்பித்தது.

எல்.ரி.ரி.ஈ, முன்னாள் போராளிகளின் ஜீவனோபாய செயற்பாடுகள், ஆதரவற்ற குடும்பங்களுக்கான வீடமைப்பு, குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் ஆகியன அவற்றுள் சிலவாகும்' என அவர் கூறினார்.

சிங்களவர்களும் தமிழர்களும் பல தலைமுறைகளாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். ஆனால், கர்வம்கொண்ட உயர்மட்ட தமிழர்கள் சிலர் தமிழர்களுக்கான தனிநாட்டை பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை தூண்டினர். பெரும்பாலான தமிழ் மக்கள் இதை விரும்பவில்லை. என்றார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013, 08:47.13 AM ]

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 07:13.01 AM ]
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:54.10 AM ]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 09:02:41 GMT ]
காசாவில் வாழும் 21 வயது பலஸ்தீனப் பெண் தனது 7 வருட திருமண வாழ்க்கையில் 11 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:23:39 GMT ]
புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 08:01:12 GMT ]
இந்தியாவில் முதன் முறையாக நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.