செய்தி
சம்பந்தன் சொன்ன கருத்தில் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை!- ஜமமு தலைவர் மனோ கணேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 12:10.36 PM GMT ]
கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த, ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை.

உண்மையில் இந்த அரசாங்கத்துடன், இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள்.

உண்மையில் அங்கே சொல்லப்பட்ட கருத்து, அத்தகைய ஒரு ‘தேசிய அரசு’ யோசனை அரசின் உயர் தலைவரினால், நேரடியாக கூட்டமைப்பு தலைவருக்கு முன் வைக்கப்படுமானால், அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரச தலைவருக்கு தாம் தெரிவிப்போம் என்றே கூட்டமைப்பு தலைவர் சொன்னார் என நான் நினைக்கிறேன்.

அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமானால், அரசு அதிபரிடம் தான் என்ன சொல்ல போகிறேன் என்பதையும் சுருக்கமாக, ஊடகவியலாளரிடம் சம்பந்தன் தெரிவித்தார் என நான் நினைக்கிறேன்.

தாங்கள், முதலமைச்சர் பதவியையோ, அமைச்சர் பதவியையோ எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அவை பற்றி அரசு தலைவரிடம் பேசும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் சம்பந்தன் சிங்கள மொழியில் சொன்னதை நான் கேட்டேன்.

தமிழர்களின் அபிலாஷைகளையும், இந்த கிழக்கு தேர்தலில் அரசுக்கு எதிராகவே தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதையும், அப்படியான சந்தர்ப்பத்தில் சம்பந்தன் அரசு தலைவருக்கு நேரடியாக சொல்ல நினைத்திருக்கலாம்.

எனவே இதை, ஏதோ அரசுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தாக மிகைப்படுத்தி அபிப்பிராயம் தெரிவிப்பது முறையில்லை.

மேலும் இந்த அரசாங்கத்துடன் எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண தயாராக இருக்கின்றோம் என்று, நாட்டிற்கும், உலகத்திற்கும் தமிழ் தரப்பு தொடர்ந்து சமிக்ஞை காட்டி வர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும்.

அங்கே போய் அடிப்படை நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அறிவிப்புகளை வைத்துகொண்டு தீர்ப்பு வழங்க கூடாது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 12:22.48 PM ]

வெலிமடையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சீத்தாஎலிய பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.