செய்தி
தமிழக மீனவர் ஒருவர் இலங்கைச் சிறையில் உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 07:38.49 AM GMT ]

இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நேற்று உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த 8 ஆண்டுகளாக இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு மண்டபம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் போதைப் பொருட்களை கடத்தியதாக இராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்களில் 62 வயதான தங்கராசு என்பவர் நேற்று உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கு காரணம், மாரடைப்பு என்று கூறப்பட்டுள்ளது.

அவரது உடலைக் கொண்டு வரும்படி, தங்கராசுவின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை தமிழகம் கொண்டு வர கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளைச் செய்வதாக தெரியவருகிறது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 02:43.42 AM ]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[ Wednesday, 19-06-2013, 02:38.55 AM ]

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 02:36.11 AM ]
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 02:32.55 AM ]

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 02:32.07 AM ]
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Wednesday, 19-06-2013 02:29:40 GMT ]
சீனாவின் கால்பந்து சுற்றுத்தொடர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.