வவுனியா, ஓயா சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் எஸ். கந்தராஜா (வயது55) என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்நாள் இரவு மதுபோதையில் குறித்த கடைக்குச் சென்ற இரு இளைஞர்களும் சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.
இவர்கள் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் போல் தோற்றமளித்ததாலும் மதுபோதையில் இருந்ததாலும் சிகரெட் வழங்க கடை உரிமையாளர் மறுத்துள்ளார்.
இதனால் அவர்கள் கற்களால் குறித்த கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.
அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.