வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம். ரஞ்சித் பதவிப் பிரமாணம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் எஸ்.எம். ரஞ்சித் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமத்திய மாகாண முதலமைச்சராக தன்னை நியமிக்காவிடில் 120 உறுப்பினர்கள் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகுவர் என முன்னாள் அம்மாகாண முதலமைச்சர் போ்டி பிரேமலால் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

