செய்தி
 Video
இலங்கை திரும்பிய 18 அகதிகள் குறித்து ஆஸி. எதிர்க்கட்சி பிரதி தலைவர் சந்தேகம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 08:45.54 AM GMT ]
அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவில் இருந்து நவுரு தீவிற்கு அனுப்பும் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் இலங்கை திரும்பிய அகதிகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அதிக அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்திருந்த இந்த அகதிகள், இலங்கையில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை காரணம் காட்டியிருந்தனர். இலங்கைக்கு மீண்டும் செல்வதில் அச்சுறுத்தல் இருப்பதாக தமது விண்ணப்பங்களின் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்தநிலையில் பசுபிக் திட்டத்தின் கீழ் அவர்கள் நவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த போதும், இந்த நவுரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கையர்கள் நாடு திரும்புவதாக அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை 18 அகதிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையம் வந்திறங்கியவர்களை இலங்கை அதிகாரிகளும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் விசாரித்து தகவல்களைப் பதிந்துகொண்டதாகவும், திரும்பி வந்துள்ள 18 பேரில் 14 பேர் சிங்களவர்கள், 3 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய எதிர்கட்சியின் பிரதி தலைவர் ஜுலி பிசொப்,

உயிராபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிப்பதற்காக தஞ்சம் கோரி விண்ணப்பித்த இந்த இலங்கையர்கள், சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நவுரு சென்றால் தண்டனையிலிருந்தும் உயிராபத்திலிருந்தும் தமக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்பதை அறிந்தும் அவர்கள் இலங்கை செல்ல உடன்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது என்றார்.

தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நிரந்தர குடியேற்ற அனுமதி வழங்காமல் சொந்த நாட்டில் ஆபத்து நீங்கும் காலம் வரைக்கும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதை அனுமதிக்கும் விதமான தற்காலிக விசாக்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஜூலி குறிப்பிட்டார்.

ஆபத்து வராது என்று தெரியவரும் சமயத்தில் அவுஸ்திரேலியா வரும் படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 01:46.54 AM ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
[ Thursday, 20-06-2013, 01:38.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 12:37.55 AM ]
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 12:26.31 AM ]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.  இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

[ Wednesday, 19-06-2013, 11:34.58 PM ]
ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.