அரசியல்வாதிகளின் மகன்மார் எந்தவொரு இடத்திற்கும் எந்தவொரு நேரத்திலும் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய முடியும்.
தாக்குதலுக்கு இலக்கான இராணுவப் புலனாய்வு அதிகாரி, தம்மை அவர்கள் தாக்கவில்லை என நீதிமன்றில் சத்தியக்கடதாசி மூலம் அறிவிக்கின்றார்.
இதற்கு முன்னரும் இவ்வாறு களனி பிரதேசத்தில் சமுர்த்தி அதிகாரியொருவர் தாமகவே தம்மை மரத்தில் கட்டிக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் ஆளும் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.