செய்தி
(2ம் இணைப்பு)
 
ஐ.நா. பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் மகிந்த பங்கேற்கமாட்டார்! ஆங்கில ஊடகம்
[ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 08:04.09 AM GMT ]
ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி வருகை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் தனது அமெரிக்கப் பயணத்தைத் திடீரெனக் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் போர்க்குற்றவாளியை கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே, இந்தப் பயணத்தை அவர் திடீரெனக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டதற்கான காரணம் ஏதும் வெளியிடப்படவில்லை.

2ம் இணைப்பு

ஐ.நாவிற்கான மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் ரத்தானது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியா!

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றவிருந்த இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக, செப்ரெம்பர் 26ம் திகதி சனிக்கிழமையன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றிற்கு தயாராகி வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் ரத்தாகியுள்ள செய்தி வெளிவந்துள்ளது.

இதேவேளை, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும், மகிந்த ராஜபக்சவிற்கு அமெரிக்க அரசினால் வழங்கப்படும் இராஜதந்திர விலக்கிற்கு எதிரான வழக்கினை, அமெரிக்க மாவட்ட நீதிமன்றமொன்று தள்ளுபடி செய்துள்ள போதும், இவ்வழக்கினை மேன்முறையிட்டு நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் ரத்தாகியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து இலங்கை அரச வட்டாரங்கள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை அரசுத் தலைவரது லணடன் பயணங்கள் அவருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்கனவே கொடுத்துள்ள நிலையில், மேற்குலக நாடுகளுக்கான மகிந்தவின் பயணங்கள் பெரும் சவால் மிகுந்ததாகவே உள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஆகியனவற்றின் ஊடாக, மீண்டும் ஒரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அசிங்கப்பட்டு நாடுதிரும்புவதை  இலங்கை அரசுத் தலைவர் விரும்பாமை காரணமாகவே இப்பயணம் ரத்தாகியிருப்பின், அது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதலாமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்சவினது அமெரிக்கப் பயணம் ரத்தாகியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ள நிலையில் மகிந்தவிற்கு எதிரான 'பொங்குதமிழ்' கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வு இறுதிநேரம் வரை தயார் நிலையிலேயே இருக்குமென நாடுகடந்த தமிழீழ அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.