செய்தி
டெசோ மாநாட்டை கட்சித் தலைவர்கள் பங்கேற்பதை தடுக்கும் முயற்சியில் பிரசாத் காரியவசம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 09:31.29 AM GMT ]
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு எனப்படும் டெசோ மாநாட்டில் தாம் பங்கேற்பதை தடுப்பதற்கு டில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் கரியவாசம் முயற்சிகளை மேற்கொண்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் கலைஞரிடம் கலந்துரையாடுமாறு தாம் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்வரும் 12 ம் திகதி நடைபெறவுள்ளது..

டெசோ மாநாட்டில் பங்கேற்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

ஒகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறயிருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் இலங்கைத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார்.

அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரிடம் கூறினேன், தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள்.

இலங்கை அரசு மற்றும் தலைவர் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும், திமுக தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 07:13.01 AM ]
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:54.10 AM ]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:31.12 AM ]

கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 06:30.55 AM ]
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013 08:37:45 GMT ]
எகிப்தை சேர்ந்த 33 வயதான ஹஜாத்காடி என்பவன் குவைத் நகரில் தங்கியிருந்த போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான்.
[ Wednesday, 19-06-2013 05:23:39 GMT ]
புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 08:01:12 GMT ]
இந்தியாவில் முதன் முறையாக நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.