செய்தி
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை
[ திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 07:30.41 AM GMT ]

யாழ்ப்பாணம்,  ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை வெட்டப்பட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சடலத்துக்கருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொழில் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் குறித்த நபர் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்ததாகவும், இடையில் அவரைக் காணவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது, அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 17:54:21 GMT ]
உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.