செய்தி
இந்திய - இலங்கை வீஸா கட்டுப்பாடுகள் தளர்வு!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:10.15 AM GMT ]
இந்திய இலங்கை உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பபை அதிகரிக்கவும் ஏற்ற வகையில் இரண்டு நாடுகளினதும் வீஸா நடைமுறைகளில் தளர்வை ஏற்படுத்த இரு நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்றுத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்மா, நேற்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் தனது வருகையின் நோக்கம் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது வாகன உற்பத்தி, பொறியியல் பொருள்கள் உற்பத்தி மற்றும் மருந்து மையம் போன்ற தனித் தன்மையான நிலையங்களை உருவாக்கி சிறந்த பொருளாதார மண்டலம் ஒன்றை இலங்கையில் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக இந்திய அமைச்சர் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.

இதன்போது இலங்கையும் வீஸா நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்போது இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு வருமாறு சர்மா கேட்டுக்ககொண்டார்.

இதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்த அவர் இருநாட்டு கடல் எல்ல பிரச்சினை குறித்தும் பேசியதாகவும்,விரைவில் இந்திய, இலங்கை கடல்சார் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 07:28.30 AM ]
திருகோணமலையில் இருந்து சிறிலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போரை நடத்தத் திட்டமிடுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
[ Sunday, 26-05-2013, 07:06.18 AM ]
தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:45.06 AM ]
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Sunday, 26-05-2013, 06:17.29 AM ]
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:07.03 AM ]
கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013 05:36:28 GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:45:57 GMT ]
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
[ Sunday, 26-05-2013 06:44:57 GMT ]
தற்போது தமிழ் திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தெரிவு தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 26-05-2013 04:57:11 ]
1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.