செய்தி
யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளையின் ஊழியர் 7 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுடன் தலைமறைவு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 04:26.02 PM GMT ]
இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கிளையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடயத்தை வங்கி நிர்வாகம் ஊடகங்களுக்கு கசியவிடாது பார்த்துக் கொண்டது. எனினும் விடயம் ஊடங்களுக்கு இன்று மாலை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் இயங்கும், சில ஊடகங்களின் முதலாளிகளுடன் தொடர்பு கொண்ட வங்கி நிர்வாகம் குறித்த செய்தி வெளியிடப்பட்டால் மக்கள் வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும். எனவே அவ்வாறு ஏதேனும் நடந்தால், எங்கள் விளம்பரங்கள் உங்களுக்கு கிடையாது என கூறியுள்ளது.

அதனையடுத்து, செய்தியை தணிக்கை செய்ய அந்த ஊடக நிர்வாகங்கள், ஆசிரிய பீடத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தின்போது பெருமளவு மக்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளின் அத்தாட்சித் துண்டுகளை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், யுத்தத்தின் பின்னர் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அவற்றை மீட்க முயற்சித்தபோதும், அந்த மக்களுக்கு அவை கிடைக்கவில்லை. குறிப்பாக புதுக்குடியிருப்பில் 5 பவுண் நகையை 23 ஆயிரத்திற்கு 2008ம் ஆண்டு பெண்ணொருவர் அடகு வைத்துள்ளார்.

ஆனால் அதற்கான அத்தாட்சித் துண்டை யுத்தகாலத்தில் தொலைத்துவிட்டு, யுத்தத்தின் பின்னர் அந்த நகையினை மீட்பதற்கு குறித்த மக்கள் வங்கியின் கொழும்பு தலைமையகம் வரையில் ஏறியிறங்கியிருக்கின்றார். ஆனால் இன்றுவரை அந்த நகை அவருக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு பல சம்பவங்கள் இந்த வங்கியினால் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏனைய வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு அவர்களுடைய நகைகளை வழங்கியிருக்கின்றது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 07:20.41 AM ]

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை ஜெனிவாவோ, ஜெயலலிதாவோ அல்லது வைகோ.வோ தீர்மானிக்க முடியாது. இந்த நாட்டு மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

[ Tuesday, 18-06-2013, 06:59.02 AM ]
2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது.
[ Tuesday, 18-06-2013, 06:43.56 AM ]
'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த ஆலய விக்கிரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,என மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
[ Tuesday, 18-06-2013, 05:54.24 AM ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013, 05:39.50 AM ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 07:34:10 GMT ]
பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி பேருந்தை பெண் மனித வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தகர்த்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 07:26:07 GMT ]
ராகுல் காந்தி பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Tuesday, 18-06-2013 07:41:22 GMT ]
கொலிவுட்டில் நண்பன் படத்திற்குப் பின்கு ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் ‘ஐ’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.