செய்தி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 11:49.05 AM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தனது அமைச்சரவை மீளமைத்துள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

15 அமைச்சர்களை கொண்டதாக விரிவாக்கம் பெற்றுள்ள அமைச்சரவை மீளமைப்பு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக செய்தியில்,

பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.

அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாற்றங்கள் அமைச்சரவையின் தொடர்ச்சியை உறுதிபடுத்தவும் அதே வேளையில் பல புதிய உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தமை மகிழ்ச்சிக்குரியதே.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினது இலக்கினை அடைவதற்கு மீளக் கட்டமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் விபரங்கள்:

துணைப் பிரதமர்கள்:

திரு உருத்திராபதி சேகர் - மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல்

பேராசிரியர் செல்வா செல்வநாதன் -  நிதித்துறை

திருமதி சுபா சுந்தரலிங்கம் - துறைசாரா அமைச்சர் - பிரதமர் பணியகத் தலைவி

அமைச்சுக்களின் விபரங்கள் :

திரு டிலக்சன் மொறிஸ் - இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணை-தடுப்பு

திருமதி பாலாம்பிகை முருகதாஸ் - பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல்

கலாநிதி தவேந்திர ராஜா - கல்வி, உடல்நலத்துறை

திரு முத்துக்குமாரசுவாமி இரத்னா - ஏதிலிகள் விவகாரம்

திரு சாம் சங்கரசிவம் - வெளியீடுகள் ஆவணக் காப்பகத்துறை

திருமதி ரஜனி சின்னத்தம்பி - தமிழ் கலைகள் தொன்மை பேணல்

திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் - அரசியல் கைதிகள, போர்க்கைதிகள், இடம்பெயர்ந்தோர் விவகாரம்

திரு சிவகுருநாதன் சுதர்சன்  -   ஊடக விவகாரம்

செல்வி வாசுகி தங்கராஜா -  அனைத்துலக விவகாரம்

திரு தணிகாசலம் தயாபரன் - அரசியல் விவகாரம்

திரு நிமால் விநாயகமூர்த்தி - பொருண்மிய அபிவிருத்தி,  சூழல்துறை

மீளமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் பலர் இணைக்கப்பட்டும்  ஏற்கனவே இருந்த சில அமைச்சுக்களைப் பிரித்தும், வேறு சிலவற்றின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டும் உள்ளது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.