செய்தி
த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 05:45.50 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது, விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது?

இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது? அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக் கொடுக்கவா பார்ப்பது எப்படி சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.

மண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 03:05.37 AM ]

 இலங்கையில் பொலிசாரின் எதிர்ப்புக்கும் மத்தியில், 1000 குதிரைவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை சாதாரண பாதைகளில் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

[ Sunday, 26-05-2013, 03:00.15 AM ]
பொதுநலவாய நாடுகளின் செயலக உறுப்பினர்களை சந்தித்து பேசுவதற்காக லண்டன் சென்றிருந்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் விசேட குழு நாடு திரும்பியுள்ளது.
[ Sunday, 26-05-2013, 02:56.54 AM ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா வாக்களித்தமை, சிறிலங்கா கிரிக்கெட்டின் வருமானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013, 02:45.04 AM ]

யாழ்ப்பாணத்தில் இராணுவக் குடியிருப்பொன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 02:28.10 AM ]

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

[ Sunday, 26-05-2013 02:00:40 GMT ]
ஜப்பானில் 6 மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் ஷின்சோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்காக அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.