செய்தி
வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:28.22 PM GMT ]
அரசாங்கத்திற்கு எதிரான தாயகத்தின் கள யதார்த்தத்தை வெளியிட்டுவரும் இணைய ஊடகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில்,  உள்ளூர் ஊடகங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது.

கடந்த 11ம் திகதி யாழிலிருந்து வெளியாகும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.

இதேபோன்று வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரமும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இதன்போது இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து பிரசுரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை பிரசுரித்தல் தொடர்பாக கேள்வியெழுப்பபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ்வாறான விசாரணைகளின் மூலம் அரசாங்கம், ஊடகங்களின் வாயை நிரந்தமாக மூடுவதற்கு முயற்சித்து வருகின்றமை புலனாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேசிய மட்டத்தில் வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் யாழ். பதிப்பில் வெளியாகும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அந்த பத்திரிகையின் தலைமையத்துடன் அரசாங்கம் முறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 27-05-2013, 02:22.42 AM ]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

[ Monday, 27-05-2013, 02:20.45 AM ]

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு ஒன்றில், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க இன்று சாட்சியமளிக்க உள்ளார்.

[ Monday, 27-05-2013, 02:19.58 AM ]

இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

[ Monday, 27-05-2013, 01:48.19 AM ]
மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை மீளப்பெற்றமை தொடர்பில் இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழு பகிரங்கமாக பதில் வழங்கவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
[ Monday, 27-05-2013, 01:41.44 AM ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டுமேன பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
[ Sunday, 26-05-2013 15:56:18 GMT ]
கொக்கைன் போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
[ Sunday, 26-05-2013 07:56:43 GMT ]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கும் லட்டு பிரதாசம் உலக பிரசித்தி பெற்றது. இதன் சுவையும், மணமும் அலாதியானது.
[ Sunday, 26-05-2013 18:51:26 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
[ Sunday, 26-05-2013 08:08:31 GMT ]
ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
[ Sunday, 26-05-2013 19:32:34 GMT ]
முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே இதுவரை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியானது. ஆனால் இன்று நிலைமையில் தலைகீழ் மாற்றம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 26-05-2013 01:42:46 ]
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா தலைகீழாய் நில்லடா” என்ற மாற்றி எழுதுமளவிற்கு, ஈழத்தமிழரது நிலை காணப்படுகிறது.