செய்தி
தமிழீழம் அமைவது இந்தியாவிற்கு நன்மையானதே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:30.52 PM GMT ]
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு செயலற்ற அமைப்பு ஆகிவிட்டனர் என இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளால் விரோதமான நடவடிக்கைககள் எதுவும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1983 கலவரங்களுக்குப் பின்னர் ஒரு சுதந்திர தமிழீழத்தை முன்மொழிந்தார்.

இந்த முயற்சியை மீண்டும் செயற்படுத்துவது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிற்கு இதனால் இரண்டு நன்மைகள் உண்டு என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

1. இந்து சமுத்திரத்தில் ஈழ மக்கள் ஒரு நிரந்தர நண்பராக இருப்பார்கள்

2. வர்த்தகத் துறையில் நட்புறவைப் பேணுவர்.

2012 ஜூலை 16 இந்துப் பத்திரிகையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், “தமிழீழம்” என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீடித்திருக்கிறார்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அவருக்கு எழுதிய கடிதத்தில், அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டு விட்டதாலும், அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு, அந்த அமைப்பு சிதைவடைந்துள்ள நிலையில் அவர்களை தடை செய்வது தேவையற்றதும், பொருத்தமற்றதுமாகும்.

விடுதலைப் புலிகள் இருப்பார்களானால் அவர்கள் ஆவி உருவமாகவே இருப்பார்கள். இவர்கள் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது காலங்கடந்த விடயமாகும். ஆவி ஒருநாளும் அச்சுறுத்தும் செயல்களை செய்யாது.

இந்திரா காந்தி எமக்கு ஒரு நினைவு செய்தியை தந்துள்ளார். அது என்னவெனில், 1983 இல் தமிழர் எதிரன இனக்கலவரத்தின் பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை (TULF) சந்தித்து, இலங்கையில் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ்நாட்டை உருவாக்கும் ஆலோசனையை தந்தது எமது ஞாபகத்திற்கு வருகின்றது.

இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி விடுதலைப் புலிகளுக்கு ஈழம் பெறுவதற்கு பலவழிகளில் உதவினார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான நட்புறவு தொடராது விட்டதையிட்டு நாம் வருந்துகின்றோம்.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசியலில் இனி எப்போதுமே பிரசன்னமாக மாட்டார்கள். ஆகவே இந்தியாவும் ஈழத் தமிழ் மக்களும் ஒரு புதிய உறவை ஏற்படுத்த வேண்டும். இந்திரா காந்தி 1983இல் விரும்பிய தமிழீழ தீர்மானத்தை இப்போதுள்ள இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றோம்.

தமிழ்நாட்டில் எமது தமிழ் உறவுகளை நாம் நேசிப்பதுடன் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதை நாம் விரும்பவுமில்லை அதனை ஊக்குவிக்கவும் மாட்டோம். அத்துடன் உலகத் தமிழர்கள் எவருமே இந்த செயலை விரும்பவும் மாட்டார்கள். தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியப் பிரஜைகளாக நன்றாக இருக்கின்றனர். அதை எங்களுக்கு குழப்ப விருப்பமில்லை.

இலங்கையிலுள்ள தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் துரத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இன அழிப்பு நடவடிக்கைக்கு உட்பட்டும் வருகின்றனர். ஆனால் இந்தியத் தமிழர்கள் இந்திய இராணுவத்தால் இப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படவில்லை.

இலங்கையில் நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்திரா காந்தி 1983இல் குறிப்பிட்டுள்ளார். ஈழம் என்பது மனித நாகரீகத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது தமிழர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர், சுதந்திர தமிழீழம் இந்தியாவிற்கு பல நன்மைகளை அளிக்கும் என்று குறிப்பிட்டதுடன் அவற்றில் இரண்டை இங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

1. கொழும்பு அரசாங்கம் போலல்லாது, தமிழீழம் முழுமையான ஒரு நட்புறவை இந்தியாவுடன் பேணிப் பாதுகாக்கும். இந்தியா சீனா, பாகிஸ்தானுடன் சண்டையிடும் போது கொழும்பு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் ஆதரவை வழங்கியது.

பெரும்பாலான ஈழத் தமிழ் மக்கள் வீட்டில் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தியின் ஓவியங்களை வைத்திருப்பது தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டுள்ள ஆழமான நேசத்தையும், அவர்களின் உறவின் தன்மையையும் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழீழ அரசியல், கொள்கைத் திட்டங்கள் இந்த உணர்வுகளைப் பின்பற்றும். மேலும் தமிழீழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலிருக்கும் இந்து சமுத்திரத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஈழம் ஆதரவளிக்கும்.

2. தமிழீழ தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் போல் ஒரு இலட்சிய, மற்றும் புதுமையான வர்த்தக துறையில் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இந்தியாவுடன் வர்த்தக நட்புறவை பேணுபவர்களாகவும் இருப்பார்கள். இது இந்தியாவின் வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் எழுதியுள்ள கடிதத்தின் முடிவில், இந்தியா தனது முழுமையான செல்வாக்கை பாவித்து இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பானதும், அமைதியானதுமான தனிநாட்டை பெற்றுத் தரும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 10:08.06 AM ]
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன.
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013, 08:47.13 AM ]

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.