செய்தி
நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததான சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் ரிஷாத்!
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:56.56 PM GMT ]
மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிபதியை தொடர்பு கொண்டு அந்தத் தீர்ப்பு பிழையானது என்று கூறியதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வெளிவந்த செய்திகளை அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்துள்ளார்.

இதனிடையே மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிபதியை தொடர்பு கொண்டு அந்தத் தீர்ப்பு பிழையானது என்று கூறியதாகவும், அதை அடுத்து நீதிபதி இதை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு, அச்சுறுத்தலைக் கண்டித்து இலங்கையின் வடக்கில் சட்டத்தரணிகள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததனால், பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம், ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, எந்தவொரு கட்டத்திலும் தான் நீதிபதியை தொடர்பு கொண்டு பேசவும் இல்லை, அச்சுறுத்தல் விடுக்கவும் இல்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மன்னாரில் தற்போது நடைபெற்று வரும் விஷயங்களை பார்க்கும் போது, அங்கு இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரிவதாக அவர் கூறுகிறார்.

இவ்வகையான செயல்பாடுகள் முஸ்லிம் மக்களை மன்னாரிலிருந்து துரத்துவதற்கு செய்யப்படும் ஒரு சதியாகவே தான் பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:58.09 AM ]
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப்பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:54.56 AM ]

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 02:44.45 AM ]

இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 02:41.27 AM ]
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013 02:41:26 GMT ]
மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.