செய்தி
நிபந்தனையின்றி பொன்சேகாவை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும்: சஜித் பிரேமதாச
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:03.15 AM GMT ]
நிபந்தனைகள் இன்றி சரத் பொன்சேகாவை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். கட்சியில் இணைந்து கொள்வதற்கு பூரணமான ஒத்துழைப்புக்களை நான் வழங்குவேன்.

நிபந்தனைகள், சட்டங்களை பிறப்பிக்காது சரத் பொன்சேகாவிற்கு உரிய பதவிகளை வழங்க கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரத் பொன்சேகா கட்சியில் இணைந்து கொண்டால் அது கட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை. உறுப்பினர்களுக்கு இடையில் மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி போதிரணசிங்க அமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது சஜித் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமாயின் உத்தியோகபூர்வமாக அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் எனவும் தலைமை தாங்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியை கலைக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 10:32.38 AM ]
தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 20-06-2013, 10:04.53 AM ]
சிறீலங்கா அணிக்கு எதிரான பிரித்தானிய மக்களின் போராட்டம் நேரலையாக இன்று காலை10 மணி முதல் நடைபெற்று வருகின்று.
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 08:04:40 GMT ]
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.
[ Thursday, 20-06-2013 10:02:04 GMT ]
இந்திய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிச்சுற்றில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 10:22:45 GMT ]
பீட்சா 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.