'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் ஏமாற்றப்படாது புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையுமென நாங்கள் நம்புகின்றோம்.
தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்திற்கு துணைபோகாமல் இருப்பதென்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.