ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுமி மரணம்! முறையான சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வைத்தியசாலையின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிப்படைந்த சிறுமியின் உறவினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அண்மையில் மரணமானவர் தொடங்கொட விஜயகுணரட்ன கம பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதான சிறுமி என தெரிவிக்கப்படுகிறது.
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கிய நிலையில், முதலில் அவர் தொடங்கொட வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டுவரும் பொழுதே சிறுமி உயிரிழந்து விட்டதாக தொடங்கொட மருத்துவர்கள் தெரிவித்தனர்
எவ்வாறாயினும் சிறுமியை அவரது தந்தை நாகொட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாகொட மருத்துவர்கள் அந்த சிறுமி உயிரிழந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சிறுமியின் தந்தை, தொடங்கொட வைத்தியசாலையின் மருத்துவர்களின் அசமந்தப் போக்கின் காரணமாக தனது மகள் மரணித்தாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, நாகொட வைத்தியசாலையின் மருத்துவர்கள் சேவையில் இருந்து இடைவிலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாகொட மருத்துவ மனையில் பணியாற்றுவதில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நளின்
ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு செல்வதற்கு தமக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளை தொடக்கம் அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.