தற்போது அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆக உள்ளது. எனினும் 60 வயது வரை சேவை நீடிப்புப் பெற முடியும்.
எவ்வாறாயினும், 57 வயதுக்குப் பின்னர், ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும். புதிய திட்டத்தின் படி, அரச பணியாளர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும்.
அதேவேளை அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்ந்தும் 55 வயதாகவே இருக்கும். அரச பணியாளர்கள் 55 வயதுடன் ஓய்வுபெற விரும்பினால் ஓய்வு பெற்று செல்ல முடியும்.