செய்தி
இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி விவகாரம்! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 12:21.58 AM GMT ]
இலங்கை வீரர்களுக்கு வேறு மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை விமானப் படை வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் பயிற்சி பெறுகிறார்கள் என்று செய்தி கேள்விப்பட்டதும், தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்புகொண்டு அவர்களைத் திருப்பி அனுப்ப கேட்டுக் கொண்டேன்.

மத்திய அரசும் தமிழகத்தில் இருந்து அவர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

வேறு மாநிலத்தில் பயிற்சி: இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால் என்ன செய்வது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படிப் பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம் என்று சொன்னேன். அதன் பிறகுதான் பயிற்சி பெற வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுப்பியதாக செய்தி வந்தது.

இந்தச் செய்தி வந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

இதுதொடர்பாக செய்தியாளர்களும் என்னிடம் கேள்வி கேட்காததால், அதைச் சொல்லவில்லை.

இதனால் எனக்குத் தமிழ் உணர்வே இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.

அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956-ம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள்.

போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று கூறியதுடன், பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் யார் என்பதையும் தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.

இனியாவது விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதத்தை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளிக்க ஜெயலலிதா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 04:34.20 AM ]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 04:18.29 AM ]

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 03:08.14 AM ]

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

[ Tuesday, 18-06-2013, 02:33.16 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 02:32.44 AM ]

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட அனைத்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது.

[ Tuesday, 18-06-2013 03:11:29 GMT ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Monday, 17-06-2013 20:43:09 GMT ]
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Monday, 17-06-2013 19:05:12 GMT ]
தமிழில் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மரியான் பார்வதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.