செய்தி
பட்டதாரிகள் தலையில் மற்றுமொரு இடி
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 11:55.52 PM GMT ]
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில், 2010, 2011 ஆம் ஆண்டு பட்டதாரிகளைப் பயிற்சி பட்டதாரிகள் பதவிக்கு இணைத்துக் கொள்வது கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையால் அவ்வருடம் பட்டம் பெற்ற பல பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், அரச நிர்வாக அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இம்மாதம் 4 ஆம் திகதி அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பி வைத்த கடிதத்தில் 2010, 2011ம் ஆண்டு பட்டதாரிகளை பயிற்சி பட்டதாரிகள் பதவிக்கு இணைத்துக் கொள்வது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் பட்டதாரிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்க உங்கள் அமைச்சு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் ஏற்பட்ட குளறுபடிகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தோம்.

அமைச்சு 4 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தால் 3000 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்றுள்ளனர். சிலர் நியமனத்திற்காக்க் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதனால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னுடன் பட்டம் பெற்ற சிலர் வேலைக்குச் செல்வதால் சிலர் கவலையடைந்துள்ளனர். அனைத்து தகுதிகளும் உள்ளபோது இவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த விடயம் தொடர்பில் நீங்கள் உடனடி கவனம் செலுத்தி குறித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 07:55.46 PM ]
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 07:39.49 PM ]
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.