செய்தி
பிரதியமைச்சர் முரளிதரனுடன் பொது வைபவங்களில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம்: பொன். செல்வராசா குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:31.15 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலரால் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தான் கலந்து கொள்ளும் அரசாங்க பொது வைபவங்களில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுடன் கலந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, திகதி அறிவிக்கப்பட்டு ஒரு வார காலததிற்குள் பட்டிருப்பு தொகுதியிலுள்ள இரண்டு பாடசாகைளில் புதிய கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் வைபவங்களில் கலந்து கொண்ட பிரதியமைச்சருடன், குறித்த இரண்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டதாகவும் இந்நிகழ்வுகளில் அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகைளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. தமது கட்சியின் தலைமைப் பீடம் இதனை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன. செல்வராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படல் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ் கூறுகின்றார்

சுயேட்சைக் குழுவொன்றிற்கு தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமருக்கு எச்சரிக்கை கடிதமொன்று கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 08:32.13 AM ]
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:53.48 AM ]

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:38.05 AM ]
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 06:19.57 AM ]
யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 07:33:48 GMT ]
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 08:28:53 GMT ]
விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப் போகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.