செய்தி
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்த அரசு முயற்சி
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:57.55 AM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய உள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 01:38.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 12:37.55 AM ]
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 12:26.31 AM ]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.  இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

[ Wednesday, 19-06-2013, 11:34.58 PM ]
ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 10:01.20 PM ]
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.