செய்தி
 Photo
கனடியப் பிரதமரினதும், ஒன்ராறியோ முதல்வரினதும் பாராட்டுக்களைப் பெற்ற விஞ்ஞானி கீதா ரவீந்திரன்
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:18.22 AM GMT ]
கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார் கீதா ரவீந்திரன்.

அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர்களுமான தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்த கீதா அமெரிக்காவில் கல்வி கற்று பொறியியல் துறையில் உயர்கல்வி கற்று பொறியியல் கலாநிதிப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அமெரிக்காவின் “நாசா” அணு ஆராய்ச்சி நிலையத்தில் பொறியியல் விஞ்ஞானியாக சில ஆண்டுகள் பணியாற்றிய கீதாவை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அதிக சம்பளத்தை பேசிய அவரை தனது விஞ்ஞான ஆராச்சிப் பிரிவில் ஒரு பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் வாய்ப்பை இரு வருடங்களுக்கு முன்னர் வழங்கியது.

அமெரிக்காவில் ஒரு வான் பொறியியல் நிபுணராக பணியாற்றிய தனது தந்தையைப் போன்று பொறியியல் விஞ்ஞானத்துறையில் பணியாற்றிய கீதா பல கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டார்.

இந்த வகையில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு மின்சக்தியை வழங்கும் மிக நுட்பமான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, அந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரிக்கப்படும் ஜி.எம் கார்களுக்கு பயன்படுத்தி தற்போது அந்த கார்களுக்கு மிகுந்த மதிப்பைப் பெற்றுத் தந்தமைக்காக ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் கீதாவை கனடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பருக்கும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டால்ரன் மெக்குயின்றிக்கும் அறிமுகம் செய்யும் வகையில் அவர்கள் இருவரையும் தனது கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தது.

பிரதமரும் மாகாண முதல்வரும் கனடாவின் ஒஸ்சாவா நகரில் அமைந்திருக்கும் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகை தந்த போது அவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் கார்களின் மின்சாரத் தேவையை அதிக பொருட் செலவின்றி வழங்குவதற்குரிய தமது கண்டுபிடிப்பு பற்றி விளக்கமளித்தார்.

மேற்படி சந்திப்பின்போது கனடாவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு கெவின் வில்லியம்ஸ் அவர்களும் அங்கு வருதை தந்திருந்தார்

தமிழ் பேசும் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன் கனடாவின் பிரதமருக்கும் ஒன்றாரியோ மாகாண முதல்வருக்கும் புதிய தொழில் நுட்பம் தொடர்பாக விளக்கமளிப்பதை படங்களில் காணலாம்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 01:43.47 PM ]
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் பதில் நீதவானின் வாகனத்திற்கு இனந்தெரியாதோர் தீ மூட்டியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
[ Saturday, 25-05-2013, 12:02.52 PM ]
ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 11:31.57 AM ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 11:20.17 AM ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை சென்னையில் காலமானார்.
[ Saturday, 25-05-2013, 11:11.42 AM ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 13:30:27 GMT ]
ஜப்பானில் அணு ஆய்வுக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது ஏற்பட்ட கதிரியக்கக் கசிவு தாக்குதலுக்கு 55 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.