செய்திகள்
[ Tuesday, 18-06-2013 11:58:55 ]
ஜாதிக ஹெல உறுமய அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தினை முற்றாக இரத்து செய்யும் நோக்கில் 21வது திருத்தத்தை இன்று பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 10:15:53 ]
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 10:04:42 ]
பொதுச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒத்துக்கொள்ளும் எதிரிகளை புனர்வாழ்விற்கு அனுப்ப சட்டத்தில் இடமில்லை என்ற வாதம் சட்டத்தரணி கே.வி.தவராசாவினால் முன்வைக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க எதிரிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை வழங்கினார்.
[ Tuesday, 18-06-2013 09:58:07 ] []
போரினால் பாதிக்கப்பட்டுக் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் இன்னல்களைச் சந்திக்கும் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு ஜேர்மனி நாட்டில் இயங்கும் “உதவும் உள்ளங்கள்” (Helping Hearts)  அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாகத் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 09:22:32 ]
வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 08:53:15 ]
கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷஸ்கரித்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 08:37:16 ]
கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் ரயில் பாதையில் தங்கியிருந்த முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருவார காலத்தினுள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றிடமின்றி தாம் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
[ Tuesday, 18-06-2013 08:10:43 ] []
தமிழ்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்து இன்று மதியம் 12 மணியளவில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள்  வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டனர்.
[ Tuesday, 18-06-2013 07:43:24 ]
சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013 07:20:41 ]
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை ஜெனிவாவோ, ஜெயலலிதாவோ அல்லது வைகோ.வோ தீர்மானிக்க முடியாது. இந்த நாட்டு மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
[ Tuesday, 18-06-2013 06:43:56 ] []
தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியில் அதிக காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் கலாநிதி இராஜதுரை கௌரவிக்கப்பட்டார்.
[ Tuesday, 18-06-2013 05:54:24 ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013 05:39:50 ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 05:30:43 ]
இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பயிற்சியளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 05:17:15 ]
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.