வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது.
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகளின்; உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கிராமசேவகர் ஊடாக சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், நேற்று இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெசாக் கொண்டாட்டத்தின் போது “சோம்பிஸ்” (zombies mask) முகமூடிகளை இறக்குமதி செய்தது யார் என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை ரஜமஹா விகாரை பெரஹர நிகழ்வில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்களிடம் 1990ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலைத் தருமாறு படையினர் கோரி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எண்ணெய் விநியோகம் தொடர்பாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (ஐஓசி) செய்து கொண்டுள்ள உடன்பாட்டை ரத்துச் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பாலியல் தொழில் சட்டமயமாக்கப்பட்டு வருமானவரி வசூலிக்கப்படும் சுவிட்சர்லாந்தில் இத்தொழில் பலவகையிலும் நடைபெற்று வரும் செக்ஸ் பார்லர்களில் வரி மோசடி நடப்பதால் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
லண்டனில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு மோசடிக்காரர் பிரான்சிலுள்ள போய்ட்டியர்ஸ் விவோன்(Poitiers Vivonne) என்ற சிறையில் அடைத்து வைத்திருந்த பொழுது திடீரென்று அவர் தனது அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.